Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“15 வருடங்களாக சுற்றுலா வாகன தொழில் பாதிப்பு”…. கூடலூரில் விதியை மீறும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. கோரிக்கை….!!!!!!!

கூடலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா தொழில் வாகன டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேற்கு மலைத்தொடரின் ஒரு அங்கமாக கூடலூர் திகழ்வதால் வெளி மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 350 சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் நாளுக்கு நாள் சொகுசு காரர்கள் பெருகி வருவதால் சுற்றுலா வாகனத் தொழில் நலிவடைந்து வருகின்றது. சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படும் கார்கள் விதிகளை மீறி சுற்றுலா தொழிலுக்கு ஈடுபடுத்தப்படுகின்றது.

இதனால் சுற்றுலா வாகன ட்ரைவர்களின் வாழ்வாதாரம் சென்ற பதினைந்து வருடங்களாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கூறியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுற்றுலா வாகன தொழிலாளர்களின்  வாழ்வாதாரம் நாளைக்கு நாள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுற்றுலா வாகன தொழில் பாதுகாக்கப்படும் என டிரைவர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள். இதனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |