அலெக்ஸி நவால்னி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் விமர்சனகாரரான எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மீது 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட முயற்சி செய்ததாக நவால்னி மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நாவால்னி இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதலாக 15 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியது வரும்.