Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

15 வருஷம் ஆச்சு…. இன்னும் ஜாதி மாற்றி கொடுக்கவில்லை…. தொழிலாளி குழந்தைகளுடன் போராட்டம்….!!

கடந்த 15 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் திருத்தம் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதால் கூலித்தொழிலாளி தனது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள செவந்திபட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு கண்ணன் ஜாதி சான்றிதழ் கேட்டு மோகனூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வெள்ளாளர் செட்டியார் என்று ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கண்ணன் சோழிய செட்டி சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தனக்கு தவறுதலாக வேறு ஜாதியின் பெயரில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது எனவும், அதனை திருத்தம் செய்து தரக்கோரி மீண்டும் மோகனூர் தாலுகா அலுவலகத்தில் 2005ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். இந்நிலையில் 15 ஆண்டுகளாக பல்வேறு முறை மனு அளித்தும் இதுவரையிலும் ஜாதி சான்றிதழ் திருத்தம் செய்து கொடுக்காமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தன்னுடைய இரண்டு மகள்களுடன் அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் கண்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது கடந்த 15 ஆண்டுகளாக அதிகாரிகள் ஜாதி சான்றிதழ் திருத்தம் செய்வதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜாதி சான்றிதல் தவறுதலாக இருப்பதால் குழந்தைகளின் கல்வி எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது என கூறியுள்ளார்.

Categories

Tech |