ராணிப்பேட்டையிலுள்ள பெரிய மலை நரசிம்மர் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்த ரோப்கார் பணியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலுள்ள பெரிய மலையில் அமைந்திருக்கும் யோக நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற தோடு மட்டுமல்லாமல் வைணவ தலங்களிலும் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில இருக்கும் மூலவரை தரிசிக்க 1,305 படிகள் ஏறி செல்ல வேண்டும். இதனால் முதியோர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பாக பெரிய மலைக்கு செல்ல ரோப்கார் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை அரசாங்கத்திற்கு விடப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற அரசாங்கம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக இப்பணியை தொடங்கியது. இதனையடுத்து தற்போது இப்பணியில் கம்பி வடத்தை இணைத்ததில் சோதனை நடைபெற்றது.