கொரோனாவை தடுப்பதில் அரசுக்கு நிதி என்பது ஒரு தடையே இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தை பொறுத்த வரை 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனவை எதிர்கொள்ள மக்களின் ஒத்துழைப்பும் தேவை. கொரோனாவை எதிர்கொள்ள அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனா தொடர்பான எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளோம்.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை தர அரசு மருத்துவமனைகளில் 15,000 படுக்கையில் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவை தடுப்பதில் தமிழக அரசை பொறுத்தவரை நிதி என்பது ஒரு தடையே இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.