ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது.
இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2007 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே சிறார்களுக்கு செலுத்தப்படும். ஜனவரி 1 முதல் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.