2022 டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி தோல்விக்குப் பிறகு டீம் இந்தியாவுக்கு என்ன தவறு நடந்தது என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது மௌனத்தை உடைத்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் விராட் கோலி (50), ஹர்திக் பாண்டியா (63) ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது..
அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியால் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 170 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து. இந்த தோல்வியை இந்திய அணி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “இன்று நாங்கள் போதுமானதாக இல்லை. நாங்கள் சில விஷயங்களைப் பற்றி சிந்தித்து இங்கிருந்து முன்னேற வேண்டும். முக்கிய அரையிறுதியில் ரன்கள் நிறைய எடுத்தால் தான் வெற்றிக்கு உதவும். நாங்கள் அதையே செய்ய எதிர்பார்த்தோம். நாங்கள் இந்த தொடரில் 180 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளோம். ஆனால் இன்று எங்களது நாளாக அமையவில்லை. போட்டிக்கு முன் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது என்று வீரர்கள் கூறினர்.
மேலும் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறன். ஹர்திக் அழகாக விளையாடினார். அந்த விக்கெட்டில் நாங்கள் 180 ரன்கள் எடுத்திருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்” என்று கூறினார்.
India in 10 overs scored 62 runs, England in the Powerplay alone scored 63. A major difference between the two sides tonight. #T20WorldCup
— Mazher Arshad (@MazherArshad) November 10, 2022