Categories
தேசிய செய்திகள்

15% – 40% வரை உயரும் விலை… மக்களுக்கு பெரும் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவிற்கு தேவையான பல்வேறு எலக்ட்ரானிக் பொருள்கள் தயாரிக்க உபயோகிக்கும் உலோகங்கள் மற்ற நாடுகளிலிருந்து கடல்வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. கடல் வழி மூலம் இறக்குமதி செய்யப்படுவதால் சில நேரங்களில் அதற்கான கட்டணம் உயர்வது வழக்கம். அதனால் பொதுமக்கள் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

இந்நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தாமிரம், துத்தநாகம், அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களை கடல்வழியாக கொண்டு வருவதற்கான சரக்கு கட்டணம் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதனால் டிவி, மிக்ஸி, வாஷிங் மெஷின் மற்றும் ஏசி உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 15% முதல் 20% வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த மாதம் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விலைகள் அதிகரிக்க தொடங்கும் என தெரியவந்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |