Categories
Uncategorized உலக செய்திகள்

அம்மாடியோ…. 15.6 லட்சத்திற்கு ஏலம் போன ஆடு…. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு அதுல?…. நீங்களே பாருங்க….!!!

மார்ரகேஷ் எனும் ஆடு ஆஸ்திரேலியாவில் இந்திய மதிப்பின்படி சுமார் 15.6 லட்சத்துக்கு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது.

பல நாடுகளில் தங்களின் தேவைக்கு ஏற்ப அல்லது மக்கள் வளர்ப்பதற்கு விரும்பும் விலங்குகள் ஏலம் விடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சில முக்கிய பண்டிகையின்போது ஆடுகள் ஏலத்திற்கு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் மார்ரகேஷ் எனும் ஆடு ஆஸ்திரேலியாவில் 21,000 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பின்படி 15.6 லட்ச ரூபாய்க்கு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்த ஏலமானது ஆஸ்திரேலியா மேற்கு நியூ சவுத் வேல்ஸிலுள்ள கோபார் நகரில் நடந்தது. இவ்வாறு அதிகமான விலை கொடுத்து அந்த ஆட்டை ஆண்ட்ரூ மோஸ்லி என்பவர் வாங்கினார். இவர் தான் இவ்வளவு செலவழித்து ஏலத்தில் எடுத்துளள மார்ரகேஷ்  ஆடு ஸ்டைலாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதில் மோஸ்லி வைத்திருக்கும் மாட்டு பண்ணையில் ஆட்டுக்குட்டிகள் மற்றும் சில கால்நடைகளை வளர்த்து வருகிறார். இதற்கு முன்பாக ப்ரோக் எனும் ஆடு இந்திய மதிப்பின்படி 6.40 லட்சத்துக்கு ஏலம்போனது. இந்நிலையில் மார்ரகேஷ்  ஆட்டை ,மோஸ்லி ஏன் இவ்வளவு விலை கொடுத்து ஏலத்தில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை அவர் கூறியிருக்கிறார். அதாவது “மார்ரகேஷ்  ஆடு விலை ஏன் உயர்ந்தது என்றால் அவற்றின் இனம் மிக அரிதானது என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது நான் ரூ.15.6 லட்சத்துக்கு வாங்கியுள்ள மார்ரகேஷ் ஆடு குயின்ஸ்லாந்து எல்லைக்கு அருகில் வளர்க்கப்பட்டது. கோபாரில் நடந்த விற்பனையில் இந்த இனத்தைச் சார்ந்த 17 ஆடுகள் மட்டுமே இருந்தது. அப்போது நான் வாங்கியுள்ள மார்ரகேஷ் ஆடு நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதால், கருவுறுதல் விகிதத்தை கொண்டிருக்கும் என்று கருதினேன்.

இதனால்தான் நான் அதை வாங்கினேன். இதற்கு முந்தைய சாதனையான ப்ரோக்-ன் ஏலத்தை முறியடிக்கும் வகையில் இந்த ஏலம் அமையும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் நான் நினைத்ததை விட இருமடங்கு விலையில் ஏலம் முடியும் என்பது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்றாகும்” என்று அவர் கூறினார். இவ்வாறு மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட அந்த ஆடு தற்போது மேற்கு நியூ சவுத் வேல்ஸில் புதிய காலநிலை மற்றும் சூழலுக்கு பழகுவதற்காக அதன் சொந்த நேரத்தை எடுத்து கொள்கிறது. மேலும் காட்டு விலங்குகளிடம் இருந்து தனது மந்தையை பாதுகாக்க ஒரு வேலியையும் மோஸ்லி சுற்றி கட்டியுள்ளார். மார்ரகேஷ் போன்ற ஆடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் விலை அதிகம் என கூறியுள்ள மோஸ்லி, இறைச்சித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தரமான ஆடுகளை வளர்க்க இப்பகுதி விவசாயிகள் விரும்புகின்றனர் என்று கூறினார்.

Categories

Tech |