உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து 15 நாட்களான குழந்தை 5 லட்சத்திற்கு விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தில் உள்ள ஒரு பகுதியில் பாத்திமா என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் வாடகைக்கு வந்து தங்கினர். அவர்கள் பாத்திமா உடன் நெருங்கி பழகி வந்தனர். ஒருநாள் வாடகை வீட்டில் வசித்த பெண் பாத்திமாவுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதுதெரியாமல் அவரும் அந்த ஜூஸை வாங்கி குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் பாத்திமா மயங்கி விழுந்தார்.
அதன் பிறகு அந்த குழந்தையை கடத்தி சென்ற தம்பதியினர் குழந்தை இல்லாத வேறு ஒருவரிடம் 5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து குழந்தையை காணாமல் தவித்த தாய் அருகில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை பற்றி புகார் தெரிவித்தனர்.புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்ததில் 11 பேர் கொண்ட கும்பல் திட்டம்போட்டு இந்த குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.