Categories
மாநில செய்திகள்

15 நாட்களுக்கு ஒரு முறை… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!

15 நாட்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் இயங்கி வரும் சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி உள்ளிட்ட சில கல்லூரிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை புதிய முறையை அமல்படுத்த இருக்கிறது. அதன்படி மாணவர்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Categories

Tech |