Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவு…. 15 பேர் பலியான சோகம்…!!!

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 15 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள குனார் என்ற மாகாணத்தில் இருக்கும் டுராண்ட் கோட்டு பகுதியிலிருந்து பாகிஸ்தான் நாட்டிற்குள் செல்வதற்கு சிலர் முயற்சித்திருக்கிறார்கள். அப்போது திடீரென்று அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு 15 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் பனிச்சரிவில் மாட்டிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாடு முழுக்க பனிப்பொழிவு, மழைப்பொழிவு ஏற்பட்டு கடந்த 15 வருடங்களாக குளிர்காலங்களில் அதிகமான குளிர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |