Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

15 அடி ஆழம்……. வீட்டின் பின்னால் திடீர் பள்ளம்…… குழப்பத்தில் போலீஸ்……. அச்சத்தில் கிராமமக்கள்….!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் தரை பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி பகுதியை அடுத்த அஞ்சாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை சுற்றியுள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது வீட்டின் சுவர் அருகே பள்ளம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Image result for திடீர் பள்ளம்

அந்தப் பள்ளம் சுமார் 10 அடி அகலம் 15 அடி ஆழத்திற்கு நீர் நிறைந்து காணப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் அந்த பள்ளம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |