பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் 15 நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் கொரோனாவின் ஐந்தாம் அலை பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் அங்கு கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. மேலும், ஒரே நாளில் 7, 678 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது, கடந்த 2020 ஆம் வருடத்திலிருந்து அதிகமான பாதிப்பு என்று சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் 15 நீதிபதிகள் மற்றும் 58 பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே, தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.