சோமாலியாவின் ராணுவ பயிற்சி மையத்தில் திடீரென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தலைநகர் மொகடிஷூவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு பயிற்சி மேற்கொள்பவரை போல் ஒரு தீவிரவாதி நுழைந்திருக்கிறார். அந்த நபர் வெடிகுண்டை தன் உடலில் மறைத்து கொண்டு வந்து, திடீரென்று தற்கொலை தாக்குதல் நடத்தினார். இதில் 15 நபர்கள் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் 20க்கும் அதிகமான நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மெதீனா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அல்-காய்தாவோடு தொடர்புகொண்ட அல் ஷபாப் என்ற தீவிரவாத இயக்கத்தினர் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.