நான்காவது மாதமாக ஜூனில் நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கியத் எட்டு துறைகள் உற்பத்தி 15 விழுக்காடு பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் ஜூன் காலாண்டில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு, சிமெண்ட், மின்சாரம், உரம், சுத்திகரிப்பு ஆகிய எட்டு துறைகளின் உற்பத்தி 24.6 விழுக்காடு எதிர்மறை வளர்ச்சியை கண்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் துறைகளில் உற்பத்தி 13.4 விழுக்காடு நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. தொழில்துறை உற்பத்தி குறியீடு எண்ணில் எட்டு துறைகளின் பங்களிப்பு, 40.2 7 விழுக்காடாக உள்ளது. கடந்த மே மாதத்தில் இத்துறைகளின் விழுக்காடு 22 சதவீத எதிர்மறை வளர்ச்சியை கண்டு இருந்ததை எனவும் மத்திய அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.