இன்று ஒரே நாளில் 6509 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், 28,711 வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாகவும், 135 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளதாகவும், 68, 519 பேர் 28 நாள் கண்கணிப்பை முடித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 16 அரசு பரிசோதனை மையமும், 9 தனியார் பரிசோதனை மையமும் என மொத்தம் 25 மையங்கள் உள்ளன.
இன்று ஒரு நாளில் மட்டும் 6509 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை 19,250 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை கொரோனா பாதிப்பு 1173ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204ஆக அதிகரித்துள்ளது.
இதில் 15 ஆண்கள், 16 பெண்கள் ஆகும். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 81 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று குறிப்பிட்ட பீலா ராஜேஷ் கொரோனா பாதித்ததில் 33 பேர் 10 வயது கீழ் உள்ளவர்கள் என்று தெரிவித்தார்.