Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. 15 திருநங்கைகளுக்கு… ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி….!!

15 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்கூட்டர் வழங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் வசித்து வரும் கால்கள் செயலிழந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு 9.30 லட்சம் ரூபாய் மதிப்பில் இணை சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலெக்டர் அமர் குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி, விஸ்வநாதன் போன்றோர் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கியுள்ளனர.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொண்டு நிறுவனம் சார்பாக 5 லிட்டர் திறன் கொண்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புதக்க 7 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ஆர். ராஜேந்திரன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரவேல், மருத்துவர் பிரபாகர் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |