கொரோனா தொற்றை வீட்டில் இருந்தவாரே ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் மூலம் கண்டறியும் பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தடுப்பூசி மட்டும் தான் ஒரே தீர்வு என்பதால் பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் இன்னும் பல நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பல மாநிலங்களில் லட்சக்கணக்கானபரிசோதனைகள் தினமும் செய்யப்பட்டு வருகின்றது.
தொண்டை மற்றும் மூக்குசளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதன்மூலம் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் வீட்டில் இருந்து சுயமாக பரிசோதனை செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் என்ற கருவியை புனைவை சேர்ந்த மைலேப் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கு CoviSelf என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒரு பரிசோதனை கருவியின் விலை ரூபாய் 250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் 15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை கண்டறியலாம். இந்தியா முழுவதும் 7 லட்சம் மருந்தகங்களில் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.