நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 15 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம தொட்டியம் கல்லுப்பட்டியை சேர்ந்த ரெங்கர், நேற்று இரவு தனது 15 மாத குழந்தையுடன் அவரது வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களுள் ஒருவரான செந்திலிடம் மற்றொரு நண்பர் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ரெங்கருக்கும் அவர் நண்பருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரைத் தாக்க முயன்றுள்ளார் . அப்போது தவறுதலாக செந்திலின் 15 மாத குழந்தை நித்திஸ்வரன் தாக்கப்பட்டதால் பலத்த காயமடைந்து மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 15 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் செந்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.