அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள மின்னியாபொலிஸ் என்னும் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நீராஜ் சோப்ரா என்பவர் கடந்த 2019 ஆம் வருடம் விமானத்தில் பயணித்தபோது, தன் அருகில் இருந்த சிறுவனிடம் தவறாக நடந்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன சிறுவன் அவரை திட்டியிருக்கிறார்.
எனினும், அவர் நிறுத்தாமல் தொந்தரவு செய்ததால், சிறுவன் புகார் தெரிவித்து விட்டார். இதனையடுத்து நீராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.