Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. 15 ரவுடிகள் கைது…. அதிகாரியின் உத்தரவு….!!

வாகன சோதனையின் போது 15 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்படி காவல்துறையினர் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரவுடி பட்டியலில் உள்ள 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 20 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்ததாக 65 வழக்குகள் மற்றும் லாட்டரி சீட்டு விற்றதற்காக 25 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சோதனையில் 300 – க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |