Categories
உலக செய்திகள்

15 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளம்பெண்… 23760 யூரோ செலவில் உருவச்சிலை….

சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் உலகம் வெப்பமாதலை தடுப்பதற்காக வழிகளில் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுவீடன் நாட்டில் வசித்து வரும் 15 வயது இளம் பெண் கிரேட்டர் தன்பர்க் .அவர் உலகின் பருவநிலையை காக்க தீவிரமாக போராடி வருகிறார். ஆகையால் இந்த 15 வயது சிறுமி இளம் சூழலியலாளர் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். மேலும் சுற்றுச்சூழல் ஆய்வாளராக இருந்த இவர் தனது பள்ளி நாட்களில் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலை நிறுத்தம்(school strike for the climate ) இயக்கத்தை உருவாக்கி மக்கள் அனைவரையும் அவர் பக்கம் திசை திருப்பியுள்ளார்.

இந்த கிரேட்டா தன்பர்க்  ஆட்டிசத்தின் அசுபெர்கர் என்ற ஒருவகையான குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்  உலகின் உணவு பழக்கவழக்கத்தினாழும் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது எனவே சைவ உணவை உண்பது மற்றும் விமான பயணம் செய்வதை தவிர்ப்பது என பல வழிகளில் புவி வெப்பமாவதை தடுப்பதற்காக போராடியுள்ளார்.

பிரிட்டனின் பல்கலைக்கழக வேந்தர் மெகன் பால் கிரேட்டா தன்பர்க் உலக அளவிலான பிரச்சனை குறித்து குரல் கொடுத்து மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் சிறந்த ரோல் மாடலாக இருந்துள்ளார் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து இந்த இளம் வயதில் அவர் செய்து வரும் முயற்சியை  பாராட்டி பிரிட்டனின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் கிரேட்டாவின் முழு உருவச் சிலையை 23760 யூரோ செலவில்  வடிவமைத்து  அவருக்குப் பெருமை சேர்த்துள்ளது.

இந்த சிலை நிறுவுவதற்கு மாணவர்களின் பங்களிப்பும் அதிகமாக இருந்ததாகவும் கொரோனா பாதிப்பின் காரணமாக மாணவர்கள் கல்லூரிக்கு வராத நிலையிலும் அவர்களின் இந்த பங்களிப்பு சிறந்தது என்று பல்கலைக்கழகம்  கூறியுள்ளது. மேலும் இது போன்று அனைத்து மாணவர்களும் உலகப் பிரச்சனைகள் குறித்து பேச முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் .

Categories

Tech |