ராஜஸ்தானில் 15 வயது மாணவியை 8 நாட்கள் அடைத்து வைத்து 20 பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஜலவர் பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி 15 வயது மாணவியை கடைக்கு சென்று பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்று கூறி அவரது நண்பன் அழைத்து சென்றுள்ளான். ஆனால் கடைக்கு செல்லாமல் பூங்காவிற்கு அந்த மாணவியை அழைத்து சென்ற நண்பன் தனக்கு தெரிந்த மூன்று நபர்களுக்கு மாணவியை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் பூங்காவில் வைத்து மாணவிக்கு வலுக்கட்டாயமாக போதைமருந்து கொடுத்து மூன்று பேரும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து 8 நாட்களில் 4 சிறுவர்கள் உட்பட 20 பேர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தனர் என்று அந்த மாணவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நான்கு சிறுவர்கள் உட்பட 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத இரண்டு காவல்துறை அதிகாரிகளும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த வழக்கின் விசாரணை சரியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது என்றும் மீதமுள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வோம் என்றும் அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.