Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் கணவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்… எனக்கு வேற வழி தெரியல… பெற்ற மகளுக்கு தாய் செய்த கொடுமை…!!

15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கலைவாணன்- விமலா.  இத்தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கலைவாணன் தனது மனைவி விமலா மற்றும் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு இருவரையும் தேடி வந்தனர்.

அப்போது திருச்சியில் விமலா தனது உறவினர் தனலட்சுமியின் மகன் ரோஹித்(21) என்பவருக்கு  தனது 15 வயது மகளை திருமணம் செய்வது வைத்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது.

அப்போது விமலா, தனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேறு வழி ஏதுமில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். இருப்பினும் சிறுமிக்கு திருமணம் செய்தது குற்றம் என்று  கூறி காவல்துறையினர் சிறுமியின் தாய் விமலா தனலட்சுமி மற்றும் அவரது மகன் ரோகித் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |