பிரிட்டனில் 15 வயது சிறுவனை கொடூரமாக அடித்து கொலை செய்த குற்றத்திற்காக 19 வயது இளைஞனுக்கு நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
பிரிட்டனில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த Alex Rodda என்ற 15 வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடீஸ்வரர் ஒருவரின் மகனான Matthew Mason(19)-னும் கொலையான சிறுவன் Alex Rodda-வும் நண்பர்களாக இருந்தநிலையில் இருவரும் அடிக்கடி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் Matthew Mason ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.
இதனை அறிந்த Alex Rodda நீயும் நானும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று அந்த பெண்ணிடம் கூறப் போகிறேன் என Matthew-வை மிரட்டியுள்ளார். மேலும் ஓரின சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என்று Matthew -வை Alex Rodda அழைத்துள்ளார். பின்னர் தனியான இடத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது Matthew தன்னிடமிருந்த இரும்பு ஸ்பேனரை கொண்டு Alex Rodda-வின் தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். தனது நண்பர்களுக்கும் காதலிக்கும் தான் ஓரின சேர்க்கையாளர் என்ற விஷயம் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் இந்த கொலையை Matthew செய்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக Matthew -வை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் Matthew மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்து உள்ளனர். அதன்படி அவர் குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.