Categories
உலக செய்திகள்

கடற்கரையில் விளையாடிய சிறுமி பலாத்காரம்…. ஒரு வருடத்திற்கு பின் கைதான குற்றவாளி…!!!!

லண்டனில் கடற்கரையில் விளையாடிய சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி ஒரு வருடத்திற்கு பின் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்தில் இருக்கும் போர்ன்மவுத் என்ற கடற்கரையில் அதிகமான ரிசார்ட்டுகள் உண்டு. எனவே, அந்த கடற்கரையில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும். கடந்த வருடம் ஜூலை மாதம் 18ஆம் தேதியன்று அந்தக் கடற்கரையில் சில சிறுவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சிறிது தூரம் தள்ளி சென்று விழுந்த பந்தை எடுக்க ஒரு சிறுமி சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த 18 வயது இளைஞன், சிறுமியிடம் அன்பாக பேசி ஏமாற்றி, கடல் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தப்பிவிட்டார். சிறுமி, அதனை தன் நண்பர்களிடம் கூறி அழுதிருக்கிறார்.

உடனடியாக, காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல்  காவல்துறையினர் அந்த குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் சுமார் ஒரு வருடம் கழித்து அந்த குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |