பிரிட்டனில் மக்கள் அதிகம் குடியிருந்த கடற்கரையில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டனிலுள்ள Bournemouth என்ற கடற்கரையில் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று மாலை நேரத்தில் 15 வயது சிறுமி, நண்பர்களோடு பந்து விளையாடியிருக்கிறார். அப்போது பந்து, சிறிது தூரம் சென்று விழுந்திருக்கிறது. எனவே, அந்த சிறுமி பந்தை எடுப்பதற்காக சென்ற சமயத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று, அந்த சிறுமியை கடலுக்கு இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அன்று, அதிக வெப்பம் நிலவியதால் சுமார் ஆயிரம் மக்கள் கடற்கரையில் தான் இருந்துள்ளனர். பந்தை எடுக்கச் சென்ற சிறுமி, நீண்ட நேரம் ஆகியும் வராததால், அவரின் நண்பர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அந்த சிறுமி கதறி அழுது கொண்டு கழிப்பறைக்கு ஓடியிருக்கிறார். எனினும், அந்த நபர் விடாமல் சிறுமியை பின் தொடர்ந்து சென்று, சிறுமியின் தொலைபேசி எண்ணை கேட்டிருக்கிறார்.
எனவே, சிறுமியின் நண்பர்கள் அந்த நபரை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். இது தொடர்பில் சிறுமி தெரிவித்துள்ளதாவது, அந்த நபர், தன் பெயர் Dabby என்றும் தனக்கு 17 வயது என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால், பார்ப்பதற்கு அந்த நபர் ஆசியாவை சேர்ந்தவர் போன்று இருந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுமி தெரிவித்த அடையாளங்களை வைத்து காவல்துறையினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்து, தகவல் அறிந்த மக்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு கூறியுள்ளார்கள்.