மாலத்தீவின் முன்னாள் மாஜி அமைச்சர் 15 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ளார்.
கொழும்பு காவல்துறையினருக்கு வந்த ரகசிய அழைப்பில், 15 வயதுடைய ஒரு சிறுமியை இணையதளத்தில் விற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சிறுமியை பல பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது மாலத்தீவின் முன்னாள் நிதியமைச்சரான முகமது அஸ்மலி உட்பட 32 பேருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கிறது. இவர்கள் இணையதளத்தின் வாயிலாக தொடர்பிலிருந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இச்சம்பவத்தில் முகமது அஸ்மலி, உள்ளூரை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் கப்பல் தலைமையதிகாரி போன்றோர் கைதாகியுள்ளனர். எனினும் முகமது அஸ்மலியிடம் விசாரணை மேற்கொண்டபோது, மசாஜ் செய்வதற்காக தான் இணையதளத்தில் தொடர்பு கொண்டேன். மற்ற எதுவும் தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் வரும் 16-ஆம் தேதி வரை, இந்த வழக்கில் தொடர்புடைய எவரையும் விடுவிக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் பாலியல் தொழிலில் சிறுமியை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த இணையதள நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.