ஸ்பெயின் நாட்டில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரர் மூவரையும் கொன்றுவிட்டு இறந்த உடல்களோடு சிறுவன் தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் இருக்கும் அலிகாண்டே நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எல்சேக் என்ற கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருக்கிறார். எனவே, அவரின் தாய், திட்டியதால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து அச்சிறுவன் வீட்டிலிருந்த வேட்டையாடக்கூடிய துப்பாக்கியை எடுத்து வந்து தன் தாயை சுட்டுவிட்டார். அதன்பின், தன் தந்தை மற்றும் 10 வயதுடைய சகோதரரையும், சுட்டுக் கொன்றிருக்கிறார். இதனையடுத்து, மூன்று நாட்களாக சிறுவன் தனியாக சடலங்களுடன் இருந்திருக்கிறார்.
இந்த நிகழ்வு வெளியில் யாருக்கும் தெரியாமல் போனது. மூன்று நாட்கள் கழித்து அந்த வீட்டிற்கு உறவினர் ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி, அச்சிறுவனை கைது செய்திருக்கிறார்கள்.