இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளத்தில் அதிக அளவு தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். பலர் பொழுது போக்கிற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தும் நிலையில் சிலர் அதனை வருமானம் பார்க்கும் வழியாக கருதுகின்றனர். அதற்கு யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்றவை வழித்தடமாக அமைகிறது. இதேபோன்று youtube மூலமாக ஒருவர் மாதம் 7 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
பிலிப்பைன்ஸை சேர்ந்த 15 வயது சிறுமியான லவ் மேரி கொரோனா காலத்தில் youtube சேனல் தொடங்கி சிறிய விடுகதைகள் போன்றவற்றை பதிவிட்டு வந்துள்ளார். அதன் பிறகு குழந்தைகளுக்கான அனிமேஷன் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு தற்போது மாதம் 7 லட்சம் ரூபாய் வரை அவருக்கு யூடியூப் மூலமாக வருமானம் வருகிறது. தனது சொந்த சம்பாத்தியத்தில் இவர் தனக்கென்று ஒரு வீட்டை வாங்கியுள்ளார். 15 வயதில் யூடியூபில் பட்டையை கிளப்பும் இந்த சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.