Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

150பேர் அட்மிட் ஆகிட்டாங்க…! படுக்கை வசதி இல்லை… தரையில் நோயாளிகள்… திருவள்ளூரில் திக் திக் …!!

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .

சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 150 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால், இடப் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முந்தினம் மட்டும் இந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள், நான்கு செவிலியர்கள் என ஆறுபேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் கொரோனா சிகிச்சை பணிகளில் முறையாக ஈடுபடவில்லையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |