Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

150 ஆண்டுகள் பழமை…. சூறைக்காற்றில் சாய்ந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வயலூருக்கு செல்லும் பிரிவு சாலையில் 150 வருடங்கள் பழமையான அரசமரம் இருந்தது. நேற்று வீசிய சூறைக்காற்றில் அந்த மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீரமலை என்பவரது குடிசை மற்றும் பயணிகள் நிழற்குடை மீது விழுந்துவிட்டது. இதில் வீரமலை லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பிறகே அங்கு போக்குவரத்து சீரானது.

Categories

Tech |