விழுப்புரம் மாவட்டத்தில் வடவானூர் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 150 வருடங்கள் பழமையான காட்டு வகை மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் இருந்து நேற்று முன்தினம் திடீர் என புகை வெளியேறி உள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் மரம் முழுவதும் தீ பற்றி எறிய தொடங்கியுள்ளது. மேலும் லேசான காற்று வீசியதால் இந்த தீ மரம் முழுக்க பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மரத்தில் பற்றி எந்த தீயை முழுவதுமாக அனைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் மர்மநபர்கள் யாரேனும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களையோ அல்லது பட்டாசுகளையோ மரத்தில் போட்டிருக்கலாம். இதன்மூலம் மரம் தீப்பிடித்து இருக்க கூடும் என தீயணைப்பு வீரர்கள் சந்தேகத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.