சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை உள்ளிட்டவை கீரை வகைகள் அடங்கியிருந்தது. இதனையடுத்து தானியங்கள், பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, உணவு வகைகள், பழச்சாறுகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருந்தது.
இந்தத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். இவர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளிகளில் உணவு பொருள்கள், உடல் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், சிறந்த முறையில் அரங்கம் அமைத்த அங்கன்வாடி மையங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்.