கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் புஷ்பவனம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வாரம் வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் தற்போது கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கடலில் சீற்றம் காரணமாக 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டிலிருந்து நான்கு அடி வரை சேறும் சகதியுமாக படிந்துள்ளது. இதனால் இன்னும் பத்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மீனவர்கள் கூறும்போது கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.