மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ஆம் தேதி உலக திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கியுள்ளார்.
இதில் திருநங்கைகள் கோலம், பேச்சு, நடனம், பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 135 திருநங்கைகளுக்கு மாநில அடையாள அட்டை, 22 பேருக்கு காப்பீடு, 15 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 2 பேருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.