Categories
தேசிய செய்திகள்

பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்…. சிக்கி 150 பேர் பலி…? வெளியான தகவல்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 150 பேர் பலியாகியிருக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் பனிச்சரிவில் காரணமாக திடீரென தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வெள்ளம் காரணமாக அணை உடைந்தால் அங்குள்ள நீர்மின் நிலையமும் சேதமடைந்துள்ளது.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் குறித்து உத்தரகாண்ட் முதல்வரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

Categories

Tech |