வாகன சோதனையின் போது சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது சரக்கு வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் சரக்கு வாகனத்தில் வந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வசிக்கும் துரை, மணிகண்டன் மற்றும் கோபி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் கடத்தி வந்த 150 மதுபாடில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.