Categories
தேசிய செய்திகள்

150 வருட பழமையான பாலம் அகற்றம்…. புதிய பாலம் எப்போது?….. ரயில்வே துறை வெளியிட்ட தகவல்….!!!

மும்பையில் புறநகர் பாதையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே 150 ஆண்டுகள் பழமையான இரும்பினாலான கர்னக் மேம்பாலம் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் கடந்து 2014 ஆம் ஆண்டு பெருமளவு போக்குவரத்து குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த மும்பை ஐஐடி நிபுணர்க் குழு கடந்து 2018 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பாதுகாப்பபற்றது என்று சான்றிதழ் அளித்தது. இதனையடுத்து பாலத்தை அகற்ற ரயில்வே திட்டம் தீட்டியது. நவம்பர் 19ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி நவம்பர் 21 ஆம் தேதி வரை அதிகாரி 2 மணிக்கு இடிக்கும் பணி நிறைவடைந்தது.

பாலத்தை அகற்றுவதற்கு ரயில்வே துறை 500 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளதாகவும், பாலம் 44 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அகற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பகிர்ந்துள்ளார். இது குறித்து ரயில்வே துறை கூறியது, பழைய பாலத்தின் சுமார் 450 டன் இரும்பை எடுத்துச் செல்ல நான்கு கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 19 மாதங்களுக்கு கர்னக் பாலத்திற்கு பதிலாக ஒரு புதிய பாலம் அமைக்கப்படும். மேலும் 70 மீட்டர் நீளமுள்ள 26 மீட்டர் அகலம் கொண்ட புதிய பாலம் ரூ.49 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.

Categories

Tech |