Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுவரை எல்லாமே வெற்றிதான்…. 2 வருடங்களில் 150 இதய அறுவை சிகிச்சை…. சாதனை படைத்த டாக்டர்கள்….!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் 150 பேருக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நீலகிரி, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வருவது வழக்கம். அந்த மருத்துவமனையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதய அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட ஆரம்பித்துள்ளது. அங்கு துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன், மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் கல்யாணசுந்தரம் போன்றோரின் தலைமையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கோவை அரசு தலைமை மருத்துவமனையில் 150 பேருக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் 42 இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை, 3 இதய கட்டிகள் அறுவை சிகிச்சை, 83 பைபாஸ் அறுவை சிகிச்சை, 20 இதய ஓட்டைகளை அடைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதோடு ஒரு நோயாளிக்கு இதயத்தில் உள்ள 4 வால்வுகளில் இரண்டு வால்வுகளை அகற்றி விட்டு புதிதாக பொருத்தியுள்ளனர். இதனை அடுத்து இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகிய இரண்டு சிகிச்சையையும் மருத்துவர்கள் ஒரே நேரத்தில் செய்துள்ளனர். இவ்வாறு இந்த மருத்துவமனையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |