Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1,500 மாணவிகள் படிக்கும் பள்ளி…. நிழற்குடை இன்றி தவிக்கும் மாணவிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

நிழற்குடை  அமைத்து தருமாறு மாணவிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, உடையகுளம், சின்னம்பாளையம், சுப்பையாகவுண்டன்புதூர், அம்பராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்திற்காக பள்ளியின் முன்பு நிற்கின்றனர். ஆனால் பயணிகள் நிழற்குடை  இல்லாததால் மலை, வெயில் ஆகிய காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து மாணவிகள் நிழற்குடை அமைத்து தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பள்ளி அருகே நிழற்குடை அமைத்து தரவேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |