1500 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் படி மதுவிலக்கு காவல்துறையினர் கல்வராயன்மலை பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆவலூர் பகுதியில் 3 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் 1500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவற்றை கீழே கொட்டி காவல்துறையினர் அழித்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் மீது வழக்குபதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.