ஸ்மார்ட் போன் நெட்வொர்கில் களம் இறங்கிய ஜியோ, டேட்டா, சிம்கார்டு, மொபைல் என தன்னுடைய சந்தையை அசுர வேகத்தில் விரிவாக்கியது. ஜியோ கொடுத்த சலுகை, ஆஃபர்களால் வாடிக்கையாளர்கள், அந்த பிராண்டின் வாடிக்கையாளர்களாக மாறியதால் ஜியோ அடுத்தடுத்து என முன்னேறிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் அடுத்த டார்க்கெட்டாக லேப்டாப் துறையில் கால் பதிக்க இருக்கிறது. அந்த அடிப்படையில் மலிவான விலையில் சூப்பர் அம்சங்களும் லேப்டாப்-ஐ களம்இறக்க இருக்கிறது. கொரோனா தொற்று பரவலுக்குப் பின் லேப்டாப்பின் முக்கியத்துவம் மற்றும் தேவையின் காரணமாக மார்க்கெட்டில் லேப்டாப்புக்கு அதிக டிமாண்ட் உள்ளது. இவற்றில் உள்ள ஒரேபிரச்சனை என்னவெனில் விலைதான்.
குறைவான விலையில் பேஸிக் தரத்துடன்கூடிய லேப்டாப்பை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஜியோவானது, JIO லேப் டாப்பை களமிறக்கவுள்ளது. அதுவும் 15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் அந்த லேப்டாப் இருக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. JIO-வின் புது Laptop ஜியோபுக் என்று அழைக்கப்படுமாம். இதற்கென ரிலையன்ஸ் நிறுவனம், குவால்காம், மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து இந்த Laptop-ஐ உருவாக்கி, மார்க்கெட்டில் களமிறக்கவுள்ளது. இதன் வாயிலாக ஹூட்டின் கீழ் ஜியோ புக் மடிக்கணினியில் குவால்காமில் இருந்து ஒரு சிப் இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ புக் செயலிகளுக்கான ஆதரவை மைக்ரோ சாப்ட் வழங்குகிறது. இம்மாத இறுதியில் புது jioலேப்டாப் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அதன்படி கல்வி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு புது லேப்டாப் கிடைக்கும். அடுத்த 3 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வணிகரீதியாக ஜியோ நிறுவனத்தின் ஜியோபுக் Laptop கிடைக்கும். jioLaptop இந்த வருடஇறுதியில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் இத்தகவலை ஜியோ நிறுவனமானது உறுதிப்படுத்தவில்லை. தற்போதைக்கு ஜியோவின் இலக்கு மாணவர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் என்பதால், அதற்குரிய லேப்டாப்கள் டிசைன் செய்யப்படுகிறது. அனைத்து விதமான லேப்டாப்களும் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதாவது அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் லேப்டாப் மார்க்கெட்டில் பெரிய பூகம்ப விற்பனையை ஜியோ நிறுவனம் டார்கெட் செய்திருக்கிறது.