Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15,000 பணியிடங்கள் அரிய வாய்ப்பு…. நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலமாக இதுவரை ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோவையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஆட்டோமொபைல் மற்றும் ஐஐடி துறை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் காலியாக உள்ள 15,000 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |