Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில்,

  • மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன
  • கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்காக இதுவரை ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 11.07 கோடி ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன
  • 51 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது
  • 87 லட்சம் என் – 95 முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது
  • மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை 51 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது
  • ரூ. 4,113 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கொரோனா பரிசோதனை மையங்கள்,டெஸ்ட் கிட் வாங்க மாநிலங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
    செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |