கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 1300 வருடங்களாக கடலின் அடியிலிருந்து வெளியில் தெரிந்து கொண்டிருக்கும் குச்சிகள் தொடர்புடைய ரகசியம் தெரிய வந்திருக்கிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் என்ற தீவில் கடல் தண்ணீரை தாண்டி வெளியில் ஆயிரக்கணக்கில் குச்சிகள் பல வருடங்களாக தெரிந்து கொண்டிருக்கிறது. இது வரலாற்றாளர்களுக்கு, குழப்பமாக இருந்து வந்தது. அதாவது அப்பகுதியில் தண்ணீரின் அளவு குறையும் சமயத்தில் கடலினுள் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குச்சிகள் வெளியில் தெரியும்.
இந்நிலையில், அது எதனால்? என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அதாவது, அந்த குச்சிகள் சுமார் 1300 வருடங்களுக்கு முன்பாக கனடா நாட்டின் முதல் பூர்வ குடியினர், மீன் பிடிக்க பயன்படுத்திய கண்ணிகள் என்று தெரியவந்திருக்கிறது. K’ómoks என்ற இனத்தைச் சேர்ந்த 12,000 மக்கள், இந்த கண்ணிகளில் மாட்டக்கூடிய மீன்களை நம்பியே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆய்வாளர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்ட பின்பு தான் அப்பகுதியில் தென்படும், 1,50,000-லிருந்து, 2,00,000 குச்சிகள் மற்றும் 300 மீன்பிடி கண்ணிகள் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதயம் அல்லது அம்பு போன்ற வடிவத்தில் இந்தக் குச்சிகளை ஆழம் இல்லாத பகுதிகளில் பதித்து வைத்துள்ளார்கள்.
பெரிதான கடலலைகள் வரும்போது அவற்றோடு சேர்ந்து மீன்களும் வரும். அதன் பின்பு, அலைகள் திரும்பிவிடும். அவற்றுடன் வந்த மீன்கள் மட்டும் இந்த கண்ணிக்குள் மாட்டிக்கொள்ளும் அவற்றை, பூர்வகுடியின மக்கள் எளிதாக பிடித்து வந்திருக்கிறார்கள். ஆனால் நாளடைவில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தப்பகுதியில் வந்து குடியேற தொடங்கியுள்ளனர்.
எனவே, படிப்படியாக இந்த பாரம்பரியம் அழிந்திருக்கிறது. மேலும், மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்தவர்களால் பூர்வகுடியின மக்களுக்கு நோய் தாக்கியுள்ளது. மேலும், அவர்கள், பூர்வக்குடியின மக்களின் கலாச்சாரத்தை விடுவதற்கு வற்புறுத்தியுள்ளனர். எனவே, அவர்களின் கலாச்சாரம் அழிந்துவிட்டது. அப்போது, அவர்கள் வாழ்ந்த இடம், தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமாக மாறியிருக்கிறது.