Categories
மாநில செய்திகள்

15,00,000 “WHATSAPP” வதந்தி … அலைமோதிய மக்கள் கூட்டம் ..!!

கேரளாவில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் 15 லட்சம் என்ற வதந்தி பரவியதால் 1500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

வாட்ஸ் அப் உலக மக்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலியாகும். இதில் சில சமயம் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. இதனால் சில அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கேரளாவின் மூணாறு பகுதியில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாயை தவணை முறையில்  தர உள்ளதாக போலி  தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் பரவி உள்ளது.

Image result for whatsapp images

இதனை நம்பி கேரளாவிலுள்ள மூணாறு பகுதியைச் சேர்ந்த பல தேயிலை தொழிலாளர்கள் அங்குள்ள தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க 100 ரூபாய் மற்றும் ஆதார் அட்டையுடன் சென்றனர். பின்னர்,  அந்த whatsapp தகவல்  போலியானது என தபால் நிலைய அதிகாரிகள் கூறியும் அவர்கள் நம்பவில்லை . இதன்பின் ,  1500 க்கும் மேற்பட்டோர் தபால் நிலைய சேமிப்பு கணக்கை தொடங்கி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது

Categories

Tech |