Categories
ஆட்டோ மொபைல்

1,50,00,000… ரியல்மி நிறுவனத்தின் புதிய சாதனை …!!

வந்த  ஒரே ஆண்டிற்குள்  1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ரியல்மி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ரியல்மி நிறுவனம் கடந்தாண்டு மே 15ம் தேதி இந்தியாவில்  களமிறங்கியது. பிற  மொபைல்களை விட தனித்துவமான சிறப்பம்சங்களால் வாடிக்கையாளர்களை மிகவும்  கவர்ந்தது இந்நிறுவனம் ஆகும் . இதனால் இந்திய மொபைல் மார்க்கெட்டில் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உருவெடுத்தது .

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது   ரியல்மி நிறுவனம்  உலகம் எல்லாம்  20 நாடுகளில் வர்த்தகம்  செய்து வருகிறது. சென்ற 1ஆண்டு நிலவரப்படி இதுவரை 1.5 கோடி ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை  வெளியாகியுள்ளது.

தற்போதைய  விவரப்படி  இந்திய மொபைல் மார்க்கெட்டில்  4வது இடத்தில் இருக்கும் ரியல்மி நிறுவனம், உலக அளவில் அதிவேக வளர்ச்சி பெற்றுவரும்  மொபைல் நிறுவன வரிசையில்  7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |