Categories
உலக செய்திகள்

கடந்த ஒரு வாரமாக நடந்த தாக்குதல்… 1520 தலிபான்கள் கொலை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 1,520 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய தொடங்கியுள்ள நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் 154 ராணுவ அதிரடி தாக்குதல்கள் 20 மாகாணங்களில் நடந்ததாகவும், வான்வழி, பீரங்கி மற்றும் தரை வழி தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு படை தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த தாக்குதலில் 800-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 1,520 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த எண்ணிக்கை அதிகம் எனவும், இந்த தாக்குதல் ஒரு சார்புடையது என தலிபான் இயக்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |